வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

டிசம்பர் 03, 2018 482

சென்னை (03 டிச 2018): வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் காரணமாக வரும் 4ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5 மற்றும் 6ம் தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்யும். சென்னையைப் பொருத்தவரை இன்றும்(நவ.2) நாளையும் (நவ.3) சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என்று பாலசந்திரன் தெரிவித்துள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...