பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்து அந்தரங்கங்கள் பதிவு!

டிசம்பர் 05, 2018 544

திருச்சி (05 டிச 2018): பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் தங்கும் விடுதி நடத்திவருகிறார். சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்தபோது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் சில வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் (HIDDEN CAMERA DETECTOR)செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து குளியலறை, தங்கும் அறைகளில் சோதித்த போது குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்டி கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து விடுதி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இதற்கிடையே விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பாக தங்குவது குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்கும் விடுதிகள், பெண்கள் விடுதி, சிறார் விடுதிகள் குறித்த வழிக்காட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை என தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...