சென்னை ஐஐடி பேராசிரியை தற்கொலை - ஐஐடியில் தொடரும் பரபரப்பு!

டிசம்பர் 06, 2018

சென்னை (06 டிச 2018): சென்னை கோட்டூர்புரத்தில் ஐஐடி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை ஐஐடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அதிதி சிம்ஹா. இவருக்கு வயது 45. தனது கணவரைப் பிரிந்த இவர், திடீரென விபரீத முடிவை தேடிக் கொண்டார்.

கல்லூரி வளாகத்தில் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த அதிதியை உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோட்டூர்புரம் போலீசார் அனுப்பிவைத்தனர். பேராசிரியர் அதிதி சிம்ஹாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஐஐடியில் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி இருந்த நிலையில் தற்போது பேராசிரியை ஒருவ தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!