அரசு மருத்துவமனையில் விபத்து - நோயாளிகள் தப்பியோட்டம்!

டிசம்பர் 08, 2018 539

கும்பகோணம் (08 டிச 2018): கும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.. உள்நோயாளிகள் பிரிவான அந்த வார்டில் 7 பேர் உள்நோயாளிகளாக தங்கி இருந்துள்ளனர். அவர்களுடன் அவர்களது உறவினர்களும் தங்கி இருந்துள்ளனர்.

திடிரென கூரைகள் கீழே விழுந்தவுடன் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் பதற்றத்தில் அந்த வார்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தனர். இதனால் அருகில் உள்ள வார்டுகளிலும் பதட்டமான சூழ்நிலை உருவானது.

சிறிது நேரத்திற்குப் பின் காரைகள் சுத்தம் செய்யப்பட்ட பின் நோயாளிகள் மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...