டிடிவி தினகரனின் ஆஸ்தான குரு மரணம்!

டிசம்பர் 09, 2018 583

திருவண்ணாமலை (09 டிச 2018): டிடிவி தினகரனின் ஆஸ்தான் குருவான மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். இவர் மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப் பொடி சித்தர் என அழைக்கப்பட்டார்.

இவரை டிடிவி தினகரன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் அவ்வப்போது தரிசனம் செய்து வந்தனர். சித்தர் கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தான் தங்கியிருந்த சேஷாத்ரி கிரிவலப் பாதையிலேயே இன்று அதிகாலை 5 மணிக்கு உயிர் பிரிந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...