தமிழகத்தில் போட்டியிடப் போகிறார் மன்மோகன் சிங்!

டிசம்பர் 09, 2018 672

புதுடெல்லி (09 டிச 2018): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுகவுக்கு 88, காங்கிரஸுக்கு 8, முஸ்லிம் லீக் 1 என திமுக கூட்டணிக்கு 97 எம்எல் ஏக்கள் உள்ளனர். 20 தொகுதிகள் காலியாக உள்ளதாலும், ஆளும் அதிமுகவில் பலர் டிடிவி தினகரனை ஆதரிப்பதாலும் திமுகவுக்கு 3 எம்பி.க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இந்த வாய்ப்பை விட்டால், 2020 ஏப்ரலில்தான் 55 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே, தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் மன் மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி.யாக்க சோனியா முயற் சித்து வருவதாகவும், இதுதொடர் பாக திமுக தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி ஆகியோரு டன் அவர் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...