உடுமலை கவுசல்யாவின் அதிரடி - பறையிசை கலைஞரை மணந்தார்!

டிசம்பர் 09, 2018 664

கோவை (09 டிச 2018): உடுமலை கவுசல்யா பறையிசை கலைஞரை மறுமணம் செய்து கொண்டார்.

சங்கர் என்ற தலித் இனத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக சங்கர் கவுசல்யாவின் பெற்றோரால் ஆணவக் கொலை செய்யப் பட்டார். இவ்விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாதிய தீண்டாமைக்கு எதிராக கவுசல்யா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனை அடுத்து அடுத்த அதிரடியாக கோவையை சேர்ந்த பறையிசை கலைஞர் சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

கவுசல்யாவின் மிகுந்த போராட்டத்தினால் சங்கரை கொலை செய்த அவரது பெற்றோருக்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...