காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹனீபா ஜாரா!

டிசம்பர் 10, 2018 685

வாணியம்பாடி (10 டிச 2018): பெற்ற தந்தை மீது 7வயது சிறுமி போலீசில் அளித்த புகார் வாணியபாடியை பரபரப்பாக்கியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நடராஜபுரம் பகுதியில் வசிப்பவர் இஹஸ்ஸாலுல்லாஹ் இவரது 7 வயது ஹனீபா ஜாரா. இந்த சிறுமி இன்று இன்று மாலை வாணியம்பாடி நகர காவல்நிலையதில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எங்கள் வீட்டில் கழிவறை இல்லை திறந்தவெளியில் தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. இதனை என் தந்தையிடம் கூறினேன், அதற்கு அவர் நீ படிப்பில் முதல் ரேங்க் எடுத்தால் வீட்டில் கழிப்பறை கட்டிதருவதாக சொன்னார். நான் எல்.கே.ஜி முதல் தற்போது 2வது படிக்கிறேன். படிப்பில் முதல் ரேங்க் தான் இதுவரை எடுத்து வருகிறேன். ஆனால் கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றி வருகிறார். இதுவும் ஒருவகை ஏமாற்றுதல்தான், எனவே கழிப்பறை எப்போது கட்டித்தருவார் என எழுத்திக்கொடுக்கச்சொல்லுங்கள் என புகார் கூறியுள்ளார்.

புகாரை பார்த்து அதிர்ந்த போலீசார் அந்த சிறுமியின் தந்தையை வரவழைத்து விசாரித்தனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...