சோதனையிலிருந்து மீளும் நம்பிக்கை - காதர் மொய்தீன் அறிக்கை!

டிசம்பர் 12, 2018 690

திருச்சி (12 டிச 2018): ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சோதனையிலிருந்து இந்தியத்திருநாடு மீளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

இவ்வைந்து மாநிலங்களில் மத்திய பிரதேசம் 7. 27 கோடி மக்கள் உள்ள பெரிய மாநிலம். 231 சட்டப்பேரவைத் தொகுதிகள். ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு பலத்த அடி கிடைத்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் 6. 86 கோடி மக்கள் உள்ளது. இதன் சட்டப்பேரவையில் 200 தொகுதிகள் உள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறும் மாற்றம் நிகழ்ந் திருக்கிறது.

அதேபோல சட்டீஸ்கர், 2. 56 கோடி மக்கள் தொகையும் 90சட்டப் பேரவை உறுப்பினர்களும் உள்ள மாநிலம். பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸின் மூவர்ணக் கொடியின் நிழலில் இந்த மலைகள் சூழ்ந்த மாநிலம் மீண்டும் வந்திருக்கிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 62 இடங்களை பாஜக கைப்பற்றி இருந்தது. இப்பொழுது, இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தோல்வி பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு.

மிஜோராம் 10. 97 லட்சம் மக்களைக் கொண்ட சிறிய மாநிலம். 40 சட்டமன்ற உறுப் பினர் களில் வழக்கம்போல் மிஜோ மக்கள் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கேயும் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தின் 3. 51 கோடி மக்கள் 119 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது என்று காட்டும் வகையில் குறிப்பிடத்தக்கத் தொகுதிகளில் வெற்றியை ஈட்டியிருக்கிறது.

இந்த ஐந்து மாநிலங் களின் தேர்தல்கள், 2019-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக நடக்கும் வெள்ளோட்டம் என்று பத்திரிகை உலகம் படம் பிடித்திருந்தது. இந்த வெள் ளோட்டத்தில் காங்கிரஸ் எழுகிறது; பா.ஜ.க. விழுகிறது என்பது தெளிவாகியிருக்கிறது.

மிஜோராம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. குறிப்பிடும் அளவில் அவர்களின் மக்கள் தொகை இல்லை. ஆனால், மத்திய பிரதேசத்தில் 6. 6 சதவீதம், ராஜஸ்தானில் 9 சதவீதம். தெலங்கானாவில் 12. 7 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பாஜக ஆட்சியில் இஸ்லாமிய சமுதாயம் மனத்தளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருள் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை எத்துணை அளவு அடக்க முடியுமோ; ஒடுக்க முடியுமோ; அழிக்க முடியுமோ; பழிக்க முடியுமோ; அத்தனையையும் தொடர்ந்து செய்வதில் பேரின்பம் காணும் கட்சியாக பா.ஜ.க. அமைந்துவிட்டது. இது இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனை என் பதைவிட, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகப் பாரம் பரியத்துக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சோதனையாகும். இந்தச் சோதனையால் ஏற்பட்டு வரும் வேதனையில் இருந்து இந்தியத் திருநாடு மீளும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் அமையும் என்னும் நம்பிக்கையை இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் வெளிப் படுத்தியுள்ளன.

இந்திய மக்களுக்கு கூற விரும்புவது இதுதான்! இந்தியாவில் வாழும் முஸ்லிம் களுக்கு பாரதீய ஜனதா கட்சி ஆட்சி எதிரானது என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரானது. அந்தக் கட்சியின் ஆட்சி என்பதே சரித்திர சத்தியம். இதனைத் தெளிவாக உணர்ந்திருக்கும் காரணத்தால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஒன்றை வலி யுறுத்திக் கொண்டே வருகிறது.

ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா - பாருக்குள்ளே நல்ல நாடு பாரத மணித்திருநாடு. இது இந்தியா உலக அளவில் உயர்ந்து நிற்பதற்கு முழு முதற்காரணம், இந்திய மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து அண்ணன் தம்பியாய், அக்காள் தங்கையாய் வாழும் கலாச்சார பண்பாடே ஆகும்.

அந்தப் பழம்பெரும் பண்பாடு ஓங்க எல்லோரும் இதயப் பூர்வமாக இணை வோம்! இழந்த பெருமையை தேசத்திற்கு மீட்டெடுத்துத் தருவோம்! வாருங்கள் சகோதர, சகோதரிகளே! சேருங்கள் நாடு காக்கும் புனிதப் பணியில் ஒன்றிணைந்து செல்வோம்! உன்னதங்களை வெல்வோம்!
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...