ஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்கிப் பார்த்தால் அதிர்ச்சி!

டிசம்பர் 12, 2018 890

சென்னை (12 டிச 2018): பர்தா அணிந்து பெண் குரலில் ஆபாசமாக பேசிய ஆண் ஒருவரை பொதுமக்கள் அடிட்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை வேளச்சேரியில் தண்டீஸ்வரம் பகுதியில் பர்த அணிந்த ஒருவர் இளைஞர்கள் சிலர் அங்கு நின்றிருந்த பகுதிக்கு சென்றபோது ஆபாச வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். இதனால் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பர்தா அணித்திருந்த பெண் ஒருவர் இப்படி பேச வாய்ப்பில்லை என்று முடிவு செய்து பர்தாவை விலக்கி பார்த்தனர்.அப்போதுதான் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிந்தது. பின் ஆத்திரமைடைந்த இளைஞர்கள் அவரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்ட நபரிடம் போலீசார் விசாரிக்கையில் ’அந்த நபரின் பெயர் சங்கர் .கோடம்பாக்கத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வரும் என்ஜினியர் என்றும், தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு வெப்சீரியல் நிகழ்ச்சிக்காக இப்படி நடிக்க முயற்சிக்கும் போது இளைஞர்களிடம் மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இதனை நம்பாத போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...