தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேற்கூரை முகப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

டிசம்பர் 14, 2018 436

தூத்துக்குடி (14 டிச 2018): தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை முகப்பு திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை முகப்பு சிமெண்ட் பூச்சு திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து நிலையத்தில் ஒப்பந்தகாரர்கள் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு இடிந்து விழுந்த பகுதிகளை அப்புறப்படுத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...