மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு - கமல் அதிரடி!

டிசம்பர் 15, 2018 618

சென்னை (15 டிச 2018): வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...