கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி!

டிசம்பர் 16, 2018 609

சென்னை (16 டிச 2018): சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. சிலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவரும் மு.கருணாநிதியின் திருவருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் கட்சி சார்பில் செய்யப்பட்டு வந்தன. சிலையை வடிவைக்கும் பொறுப்பு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் என்பவருக்கு கொடுக்கப்பட்டது.

சிலை வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் சூழ அண்ணா சிலைக்கு அருகே மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு, நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...