மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இன்று விசாரணை!

டிசம்பர் 19, 2018 538

சென்னை (19 டிச 2018): கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிவாரணம் இதுவரை வரவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசிடம் நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...