ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் கட்சியை விட்டு நீக்கப் பட்டதன் பின்னணி!

டிசம்பர் 20, 2018 592

சென்னை (20 டிச 2018) கூட்டுறவு சங்க தலைவராக பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. அவரும், அ.தி.மு.கவிலும் உறுப்பினராக இருந்துவந்தஆர்.. அவர் மீது ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். இதற்கிடையில், கடந்த சில வருடங்களுக்கு தேனி மாவட்டம் கைலாசநாதர்பட்டியிலுள்ள கோயில் பூசாரி நாகமுத்துவின் தற்கொலையில் ஓ.ராஜாவின் பெயர்தான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியிடுவதற்கு ஓ.ராஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனையடுத்து, அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்கராஜன், கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதனையடுத்து, தேர்தல் நடைபெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பிலும் சமாதானம் ஏற்பட்டது. உடனடியாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தல் நடந்தது. கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவும், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவும் கலந்துகொண்டனர்.

பதவியேற்று சில மணி நேரங்களே ஆகியிருந்தநிலையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டார். அந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...