சென்னையில் போலி நிருபர்கள் ஆறு பேர் கைது!

டிசம்பர் 21, 2018 572

சென்னை (21 டிச 2018): பிரபல பத்திரிகையின் நிருபர்கள் எனக் கூறி டாஸ்மாக் கடைகளில் பணம் பறிக்க முயன்ற போலி நிருபர்கள் 6 பேர் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மீஞ்சூர் போலீசார் நேற்று இரவு வல்லூர் 100அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையில் இருந்து மீஞ்சூர் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த 6 பேர் தங்களை பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் என்று போலீசாரிடம் கூறினர். அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எண்ணூர் காசிம் பாஷா (34), தமிழ் பாஷா (31) மற்றும் வருண்குமார் (33), வியாசர்பாடி அப்துல் ரகுமான் (32), அடையாறு யுவராஜ் (30) மற்றும் வேலூரை சேர்ந்த பாபு (28) ஆகியோர் என்பதும், நிருபர்கள் என்று கூறிக்கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பார்களில் மிரட்டி பணம் பறிப்பது, லாரி உரிமையாளர்களிடம் அதிக லோடு ஏற்றுவதாக கூறி பணம் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, போலி நிருபர்கள் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...