வெளியான பலான வீடியோ - அலறும் அதிமுக!

டிசம்பர் 23, 2018 4535

மதுரை (23 டிச 2018): மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிகாரிகள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிமுகவை அலற வைத்துள்ளது.

மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிமுக நிர்வாகிகள் இருவர் அங்கு பணிபுரியும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டி மற்றும் மதுரை அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளராக உள்ள பரமானந்தம் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஆவின் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பெண்களிடம் பணி நிரந்தரமாக்கி விடுகின்றோம் என கூறி ஆவின் அலுவலகத்தின் கெஸ்ட் அவுஸில் உல்லாசம் அனுபவிப்பதாக செய்திகள் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.

சிறு வயது பெண்கள் உட்பட பல பெண்களுடன் இருவரும் மாறி மாறி உல்லாசமாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் ஆவின் பால் பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனராம்.

ஆனால், இது பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோ விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...