வீடின்றி வசிப்போர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

டிசம்பர் 24, 2018 451

சென்னை (24 டிச 2018): தமிழகம் முழுவதும் வீடின்றி இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்பவர்கள் குளிர்காலத்தில் கடுமையாக அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதிலும் எத்தனை பேர் வீடின்றி வசிக்கிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதிலும் வீடுகள் இன்றி சாலையோரம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுத்து ஜனவரி 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...