முஸ்லிம் பெண்கள் மசூதி போகாதது குறித்து விவாதிக்க வேண்டும் - ஹெச்.ராஜா!

டிசம்பர் 25, 2018 845

சென்னை (25 டிச 2018): முஸ்லிம் பெண்கள் மசூதி செல்லாதது குறித்து ஊடகங்கள் விவாதிக்க தயாரா? என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஊடக்ம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹெச். ராஜாவிடம் ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்த கேள்விக்கு, ஊடகங்கள் ஐயப்பன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றார்.

ஐயப்பன் குறித்தும் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் போவது குறித்தும் விவாதிப்பவர்கள், முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு போகாதது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத விவகாரங்களை ஊடகங்கள் பேசு பொருளாக்குவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குள் ரெஹானா ஃபாத்திமா என்ற ஆபாச நடிகை சென்றதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஐயப்பன் குறித்து விவாதிப்பவர்கள் முஹம்மது நபி குறித்தோ, ஜீஸஸ் குறித்தோ விவாதிக்க தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊடகங்கள் இந்து மத விவகாரங்கள் குறித்து விவாதிக்க எந்த தகுதியும் கிடையாது. அப்படி ஐயப்பன் குறித்து விவாதிப்பீர்கள் என்றால் அனைத்து மதம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...