அமைச்சர் ஜெயக்குமார் குறித்த அந்த வீடியோவை வெளியிடுவேன் - வெற்றிவேல் பகீர்!

டிசம்பர் 26, 2018 541

சென்னை (26 டிச 2018): அமைச்சர் ஜெயக்குமார் குறித்த வீடியோவை வெளியிடுவேன் என்று முன்னாள் எம்.எல்.ஏவும், அமுமுக வை சேர்ந்தவருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "அமைச்சர் ஜெயக்குமார் 26 வயது பெண்ணை கர்ப்பமாக்கி பிள்ளை கொடுத்தது எல்லோருக்கும் தெரியும். நான்தான் அந்த ரகசியத்தை வெளியே கொண்டு வந்தேன். டிடிவி தினகரனை தொடர்ந்து விமர்சித்து வந்தால் அவரது பல ரகசியங்களை வெளியிடுவேன். அவ்வாறு வரும்போது அமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்துடன் தூக்கு போட்டுக் கொண்டு சாக வேண்டும்.

எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு தேவை என்பதால் அவரது ரகசியத்தை வெளியிட்டேன். இப்போது மீடியாக்கள் கண் இருப்பதால் அந்த பெண்ணை ஜெயக்குமார் எதுவும் செய்ய முடியாது." என்றார்.

மேலும் முதல்வர் எடப்பாடி சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அமைச்சரை எதற்கு பிரதமரை சந்திக்க டெல்லிக்கு அனுப்புகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது அவரது சொந்த விருப்பம் ஆனால் அதனை விரைவில் உணர்வார் என்றும் வெற்றிவேல் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அப்பல்லோ வழங்கிய உணவு செலவு குறித்து வந்த தகவல் குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தபோது அருகில் உள்ள அறைகளில் பலர் தங்கியிருந்தனர். அவர்களுக்கு உணவு வழங்கியதற்கான செலவாக இருக்கும். அதனை நாங்கள் அப்போதே கட்டிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக என்பது தனிநபர் கட்சியாகிவிட்டது. ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். என்றும் வெற்றிவேல் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...