25 வயது பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவன்!

டிசம்பர் 26, 2018 579

புதுச்சேரி (26 டிச 2018): புதுச்சேரியில் 25 வயது பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்சபிரபா. இவருக்கு 25 வயதாகிறது. தேசிய வங்கி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த இவருக்கு ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால், கடந்த வாரம் பூட்டிய வீட்டில் கழுத்து அறுத்து இறந்திருந்தார். முதலில் தற்கொலை என எண்ணிய போலீஸார், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து விசாரணை கோணத்தை மாற்றினர்.

இந்நிலையில் விசாரணையின் போது 17 வயது சிறுவன் அந்த பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...