அதிர்ச்சி - எந்த தாய்க்கும் இப்படி ஒரு மனம் வருமா?

டிசம்பர் 29, 2018 553

சென்னை (29 டிச 2018): சென்னையில் பூந்தமல்லியில் பெற்ற தாயே தன் மகனை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் மீனாட்சி தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த மீனாட்சி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தனது 6 வயது மகனை கொலை செய்ததாகவும், பின் பயத்தில் தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாகவும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...