முத்துப்பேட்டையில் மருத்துவரை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் சிறையிலடைப்பு!

ஜனவரி 02, 2019 460

திருவாரூர் (02 ஜன 2019): முத்துப்பேட்டையில் அரசு மருத்துவரை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

கஜா புயலை அடுத்து திருவாரூர் மாவட்டம் பேட்டை பகுதியில் மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை உண்ட பெண்கள், சிறுவர்கள் ஏழு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா, முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் அரவிந்தனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.. இது தொடர்பாக மருத்துவர் அரவிந்தன் அளித்த புகாரின் பேரில் பேட்டை சிவாவை முத்துப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்கண்ணன், பேட்டை சிவாவை வரும் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிவா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...