அதிமுகவுடன் பாஜக கூட்டணி? - வானதி சீனிவாசன் பதில்!

ஜனவரி 06, 2019 336

சென்னை (06 ஜன 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்,"பாஜக எந்தக் கட்சியோடு, எத்தனை தொகுதி என்பதெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க முடிவாகும்.

டசால்ட்ஸ் நிறுவனம் தனது பார்ட்னர்ஸை தேர்வு செய்வது முழுக்க முழுக்க அவர்களுடைய சுதந்திரமான உரிமை. அரசாங்கம் டசால்ட்ஸ் நிறுவனத்தோடு விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடும்போது அதில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற அந்த கட்டளையை மட்டுமே அரசாங்கம் சொல்ல முடியுமே தவிர, யாரிடம் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கம் கவலைப்படாது.

ஏனென்றால் முழுக்க முழுக்க டசால்ட்ஸ் நிறுவனத்தினுடைய சுயவிருப்ப உரிமை. அந்த வகையில் அவர்கள் அனில் அம்பானியினுடைய நிறுவனத்தோடு மட்டுமல்ல, இன்னும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட அடக்கம்.

தன்னுடைய விமான உதிரி பாகங்களுக்கு இந்திய நாடு முழுவதும், இந்தியாவில் தயாரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்களோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் அவர்கள் இந்திய அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்களை பொறுத்தமட்டில் இந்திய அரசாங்கம் கேட்ட விமானங்களை மட்டும் கொடுக்க வேண்டும். இரண்டாவது அந்த விமான தயாரிப்பில் குறிபிட்ட சதவீத பொருட்கள் இந்தியாவில் வாங்க வேண்டும். ஆக எந்த நிறுவனத்தோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க அவர்களுடைய சுய விருப்பம் உரிமை சார்ந்த ஒன்று. அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்தது டசால்ட்ஸ் நிறுவனம் மட்டுமே.

இரண்டாவது கேள்விக்கு பதில், ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்கிறபோது ராணுவ அமைச்சகம் அதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தாலோ, சட்ட விரோதம் இருந்தால் மட்டுமே குரல் எழுப்ப முடியுமே தவிர, பிரதமரின் அத்தனை குரல்களுக்கும் எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தால் அரசாங்கத்தில் ஒரு வேலையும் நடக்காது.

இதற்கு முன்பாக பேச்சுவார்த்தை மட்டுமே 10 வருட காலம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, தற்போது நமது விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் உடனடி தேவையாக இருப்பதால் அரசாங்கம் விரைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு வகையில் லாபம் பெற துடித்தது. அது நடக்காததால் இன்று பாஜக அரசு மீது இருக்கின்ற கோபத்தில் தனக்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்று பொய் குற்றச்சாட்டுக்களை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட திரும்ப திரும்ப எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த ஜூலை மாதமே அறிவித்துவிட்டார். கூட்டணி அமைக்கப்போவது உறுதி. "

இவ்வாறு அவர் தெரிவித்தார். .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...