ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளிய சீமான்!

ஜனவரி 06, 2019 451

சென்னை ( 06 ஜன 2019): ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளி சீமான் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசினார். அதாவது சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என கூறுவது எல்லாம் அவமானம். எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்… உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்…. என விஜய்யை விமர்சித்திருந்தார்.

இதனால் ஆத்திடமடைந்த விஜய் ரஜிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஸ்டேட் தற்போது டிவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை கூட சீமான் பின்னுக்குத் தள்ளி விட்டார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...