புதுக்கோட்டை அருகே சோகம்!

ஜனவரி 06, 2019 389

புதுக்கோட்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு போய்விட்டு டெம்போ வேனில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது திருமயம் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயம அடைந்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த அருகில் உள்ளோர் போலீசுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு காயம் அடைந்தவர்கள் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தோர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...