பிரதமர் மோடி மதுரை வருகிறார்!

ஜனவரி 06, 2019 386

சென்னை (06 ஜன 2019): பிரதமர் மோடி வரும் ஜனவரி 27 ஆம்தேதி மதுரை வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கயில், "பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி மதுரை வருகிறார் . ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாங்கள் துவங்கிவிட்டோம். பிரதமர் மோடி வருவது மிகப்பெரிய மாநாடாக அமையும், மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும். மோடியின் வருகை எங்கள் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தரும். மற்ற பயணத்திட்டங்கள் பற்றி திட்டமிட்டப் பிறகு சொல்கிறேன்.

கூட்டணி குறித்து இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி வைத்துத்தான் போட்டியிடுவோம். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. காலஅவகாசம் இருப்பதால் தெளிவாக முடிவு எடுப்போம். பாஜகவின் முழுக் கவனமும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் உள்ளது." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...