டிடிவி தினகரனை கிண்டலடித்த ஸ்டாலின்!

ஜனவரி 06, 2019 167

சென்னை (06 ஜன 2019): டிடிவி தினகரனை திமுக தலைவர் ஸ்டாலின், 20 ரூபாய் தினகரன் என்று கிண்டலாக பேசினார்.

மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளா்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, திருவாரூா் இடைத்தோ்தலைக் கண்டு தி.மு.க. அஞ்சுவதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "டிடிவி தினகரன் மீது தான் சி.பி.ஐ. வழக்கு, பெரா வழக்கு, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால் அவா் தான் அச்சப்பட வேண்டும்.

டிடிவி தினகரன் நோ்த்திக்கடன் போன்று வாராவாரம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வருகிறார். ஆா்.கே.நகா் தொகுதியில் அவா் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும், அவரை ஆா்.கே.நகா் மக்கள் 20 ரூபாய் தினகரன் என்று தான் அழைக்கின்றனா். அப்படிப்பட்ட நபா் தி.மு.க.வை அச்சப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...