மாணவர் முன்தசீர் கொலையின் திடுக் பின்னணி!

ஜனவரி 06, 2019 743

கும்பகோணம் (06 ஜன 2019): ஒரே பெண்ணை நான்கு பேர் காதலித்ததால் வந்த போட்டி மாணவர் முன்தசீர் படுகொலையில் முடிந்துள்ளது.

கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரின் மகன் முந்தசீர். இவர் மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவரின் தந்தை துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மாணவர் முன்தசீர் நேற்று மாலை தன் நண்பர் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் முன்தசீர் போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசரை கடத்தியுள்ளோம். கோயம்புத்தூர் அழைத்துச் செல்கிறோம். ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மும்தாஜ் அவரது சகோதரரும் மும்தசரின் தாய் மாமாவுமான .ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் நசீர் முகம்மதுக்கு தகவல் கொடுத்தார். அவர் திருவிடைமருதூர் போலீசில் புகார் அளிதார்.

இதற்கிடையே இன்று காலை திருப்புவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் முன்தசீர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில் முன்தசீரை அவரது நண்பர்கள் நியாஸ் அகமது, முகமது கலீல், சலீம் ஆகிய 3 பேரும் முன்தசீரை கொலை செய்தது தெரிய வந்தது.

முன்தசிர் மற்றும் மூன்று நண்பர்களும் ஒரே பெண்ணை காதலித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணோ முன்தசீரை விரும்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகமது, முகமது கலீல், சலீம் ஆகியோர் காதல் போட்டியில் முன்தசீரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக கடத்தல் நாடகம் ஆடி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதற்கிடையே முன்தசீர் யாருடைய பிறந்த நாளுக்கு சென்றார் என்றும் இந்த கொலையின் பின்னணியில் வேறு எதுவும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...