உச்சத்தில் ஸ்டாலின் - அதிரும் எதிர் கட்சிகள்!

ஜனவரி 07, 2019 614

சென்னை (07 ஜன 2019): அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் அவரை நெருங்க யாருக்கும் இடமில்லை என்றும் இந்தியா டுடே சர்வே கணித்துள்ளது.

இந்தியா டுடே தொலைக்காட்சியின், ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பும் மற்றும் பிரபல கருத்து கணிப்பு அமைப்பும் சேர்ந்து தமிழகத்தில் அடுத்து முதலமைச்சராக ஆக யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. கருத்துக்கணிப்பின் இந்த முடிவு பல அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளது.

கருத்துக்கணிப்பின் முடிவுகளில் அடுத்ததாக தமிழகத்தில் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கே உள்ளது என 43 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர். அடுத்தடுத்த இடங்களில் கமல், எடப்பாடியார், ராமதாஸ் ஆகியோர் உள்ளனர். ஸ்டாலினின் இந்த அசூர வளர்ச்சி பல அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...