மன உளைச்சலில் உள்ளோம் - நாம் தமிழர் சாகுல் ஹமீது!

ஜனவரி 07, 2019 527

திருவாரூர் (07 ஜன 2019): திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்ததால் நாம் தமிழர் மன உளைச்சளில் உள்ளோம் என்று திருவாரூர் நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தேர்தல் அறிவிக்கப் பட்ட 24 மணி நேரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்து வேளைகளையும் தொடங்கி விட்டோம், எங்களுக்கு இந்த ரத்து அறிவிப்பு பெரும் சேதம் ஆகும். மத்திய பாஜக அரசு அச்சத்தின் காரணத்தால் இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

எங்களுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இந்த சூழலில் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்று சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...