ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜனவரி 08, 2019 385

புதுடெல்லி (08 ஜன 2019): ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், “சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்கலாம்’’ என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீடு மனு மற்றும் ஆலையை திறக்க தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...