மூன்று மாதங்களாக காணாமல் போன சிறுமி மீட்பு!

ஜனவரி 08, 2019 305

காஞ்சிபுரம் (08 ஜன 2019): ஹரிணி என்ற சிறுமி காணாமல் போய் மூன்று மாதங்கள் கழித்து மீட்கப் பட்டுள்ளார்.

வெங்கடேசன், காளியம்மன் என்ற நாடோடி இனத் தம்பதி தங்களது இரண்டு வயது குழந்தை ஹரிணியை காஞ்சிபுரம் மானாமதியிலுள்ள அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தொலைத்துவிட்டனர். காணாமல் போன குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அங்கேயே இருந்தனர். காஞ்சிபுரம் காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தது.

அக்குழந்தையின் தாய் ஒன்பது மாத கர்ப்பிணி குழந்தை காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சீரியஸான நிலைக்கு சென்றுதால். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், இந்த செய்தியை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தினார்.தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், சிறுமி ஹரிணி 100 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார். , இன்று (ஜனவரி 8) திருப்போரூரில் ஹரிணி மீட்கப்பட்டிருக்கிறார். காவல் துறையினர் மட்டுமன்றி, சமூக ஆர்வலர்கள் சிலரும் இதற்காக மெனக்கெட்டு துப்புதுலக்கி ஹரிணியை மீட்டனர்.

உடனே அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு ஹரிணி அழைத்துச் செல்லப்பட்டாள். முறைப்படி வெங்கடேசனும், காளியம்மாளும் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஹரிணி ஒப்படைக்கப்பட்டாள். சுமார் 100 நாட்களுக்கு பிறகு தங்கள் மகள் கிடைத்ததில் வெங்கடேசனும், காளியம்மாளும் திக்கு முக்காடினர்.

ஹரிணி மீட்பை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வரும் வேளையில், அவளை மீட்க துணை நின்றவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஹரிணி கடத்தப்பட்டாளா? அவள் திருப்போரூருக்கு வந்தது எப்படி? என போலீஸார் அடுத்தகட்டமாக விசாரிக்க இருக்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...