சினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பா மீது தீ வைத்த மகன்!

ஜனவரி 10, 2019 483

வேலூர் (10 ஜன 2019): சினிமா பார்க்க காசு கொடுக்காததால் அப்பாவை மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் அப்பாவிடம் காசு கேட்டுள்ளார். அப்பா அதற்கு மறுக்கவே அப்பாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கடும் தீ காயங்களுடன் அலறிய பாண்டியனை அக்கம்பக்கத்தில் உள்ளோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாண்டியனின் மகன் பெயர் அஜீத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...