மாநிலங்களவையில் கனிமொழியின் சாட்டையடி!

ஜனவரி 10, 2019 334

புதுடெல்லி (10 ஜன 2019): பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இடைமறித்து அமரச் சொன்ன சபாநாயகருக்கு சாட்டையடி கொடுத்தார்.

உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு திமுக, அதிமுக, ஆர்.ஜே.டி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. திமுக, ஆர்.ஜே.டி மட்டுமே மசோதாவை எதிர்த்து வாக்களித்தன. இதனால், மசோதா நிறைவேறியது.

மசோதா மீது பேசிய திமுக எம்.பி கனிமொழி, எதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது?. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன; நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை மாற்ற முடியாது” என்று கூறினார்.

இதற்கிடையே, கனிமொழியை பேசி முடிக்குமாறு துணை சபாநாயகர் இந்தியில் கூறினா. அதற்க்கு, “எனக்கு புரியும் மொழியில் பேச முடியுமா?” என்று கனிமொழி பதிலளிக்க, பின்னர் துணை சபாநாயகர் ஆங்கிலத்தில் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...