ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்திரராஜன் சரமாரி பதிலடி!

ஜனவரி 10, 2019 362

சென்னை (10 ஜன 2019): திமுக தலைவர் ஸ்டாலிலின் பாஜக குறித்த விமர்சனத்திற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின், சுட்டு போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என பேசியதற்கு பாஜகவின் தமிழக மாநில் அதலைவர் தமிழிசை, சுட்டு போட்டால் தாமரை மலராது. ஆனால் மக்கள் ஓட்டு போட்டால் தாமரை மலரும் என பதில் அளித்துள்ளார்.

அதோடு, கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? வரும் காலத்தில் ஓரங்கட்டப்படுவோம் என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல் ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்க முடியுமா? உரக்க சொல்வோம்! ஏமாற்ற வருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்! வெல்வோம்! என்று ஸ்டாலினை விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், டி ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்கவும், இல்லாதவர்கள் புதிய கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...