காங்கிரஸ் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பாய்ச்சல்!

ஜனவரி 11, 2019 442

சென்னை (11 ஜன 2019): இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதை காங் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி எதிர்த்துள்ளார்.

இதுகுறித்த அவரது சமூக வலைதள பதிவில், உயர்சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்துக்கு முரணானது. இம்முயற்சி இட ஒதுக்கீட்டுக் கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது.

வருடத்துக்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...