அதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி!

ஜனவரி 12, 2019 605

சென்னை (12 ஜன 2019): கோடநாட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகளூக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று வெளியாகியுள்ள வீடியோ எடப்பாடி அரசை நிலைகுலையச் செய்துள்ளது.

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது பற்றி அவர்கள் பேசுகின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அதில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, கொடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியாது உணமையில்லை. இதனை வெளியிட்டவர்கள் பின்புலம் குறித்து விரைவில் அறிந்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நேற்றே இது குறித்து சென்னை காவல்துறையிடம் புகார் தெரிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் இந்த வழக்கு குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம் பற்றி இப்போது ஏன் புகார் கூறுகிறார்கள். அவர்கள் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் நிர்வாகிகளிடம் இருந்து வாங்கிய ஆவணங்களை கொடநாட்டில் வைத்திருப்பதாக அந்த வீடியோவில் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான பதிவு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

திமுக என் மீது புகார் கூறுவதையே வேலையாக வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு நான் தான் காரணம் என்று ஊர் ஊராக சென்று ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால் திமுக தொடர்ந்த வழக்கு தான் தேர்தல் நடக்காததற்கு காரணம். இது போல தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறிவிட்டு தொழில் மாநட்டுக்கு தடை கோரிகிறார்" என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...