போகி அன்று பழைய பொருட்களை எரிக்க தடை!

ஜனவரி 12, 2019 459

சென்னை (12 ஜன 2019): சென்னை விமான நிலையத்திற்கு அருகே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2018- ஜனவரி14-ல் டயர், பழைய பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து பொதுமக்கள் எரித்ததால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தின் காரணமாக, காலை11மணி வரை விமானங்களை இயக்க முடியவில்லை. அதிகாலை முதல் புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

அதிகாலை 3 மணி முதல் காலை 9மணிவரை 73 விமானங்கள் பல இடங்களுக்கு புறப்படுகின்றன. 45 விமானங்கள் பல இடங்களில் இருந்து தரைஇறங்குகின்றன. போகிபுகையினால் 11மணிக்கு மேல் தரையிறங்குகின்ற விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், புறப்பட வேண்டிய விமானங்கள் எல்லாம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பலமணி நேரம் விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்அனுபவத்தின் அடிப்படையில், விமானநிலைய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனைசெய்து, இந்த ஆண்டு பயணிகளின் அசவுகரியங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, சென்னை விமானநிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் நேரங்களை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்காக 'சென்னைஏர்போர்ட்' என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளவும். ஆகவே, விமானபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், பழையபொருட்களை எரிப்பதை தவிர்த்து ஆதரவு அளிக்கும்படி விமானநிலையம் அருகே வசிக்கும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம்குறித்து, விமானசேவை தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், கீழேகொடுக்கப்பட்டுள்ள விமான நிலையங்களின் தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
044- 22563100.
044-22563600.
044-22563229.
044-22560542
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...