கஸ்டம்ஸ் அதிகாரிகளை பதற வைத்த இரண்டு பெண்கள்!

ஜனவரி 12, 2019 204

சென்னை (12 ஜன 2019): உள்ளாடைக்குள் 8 கோடி ரூபாய் தங்கத்தை சாதுர்யமாக கடத்தி கஸ்டம்ஸ் அதிகாரிகளையே பதற வைத்துள்ளனர் இரண்டு பெண்கள்.

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 01:30 மணிக்கு வந்த விமானத்தில் வந்த இரண்டு கொரிய பெண்களின் நடவடிக்கைகள் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடன் அவர்கள் இருவரையும் பரிசோதித்ததில் உள்ளாடைக்குள் இன்னொரு உள்ளாடை அணிந்து அதற்கு தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. தங்கத்தை கைபற்றிய சுங்க அதிகாரிகள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...