விலை போனதா சன்குழுமம்? - அப்பட்டமான பொய் பரப்புரை!

ஜனவரி 14, 2019 581

சென்னை (14 ஜன 2019): சன்குழுமத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையும் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி திணற வைத்ததாக பொய் தகவலை பரப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் துபாய் சுற்றுப் பயணத்தின் போது துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன்னிலையில் ராகுல் உரையாற்றினார். அரை மணிநேர உரை என்றபோதிலும் பலரையும் அவரது பேச்சு கவர்ந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 14 வயது சிறுமி ராகுலிடம் கேள்வி கேட்டதாகவும் அப்போது ராகுல் காந்தி திணறியதாகவும் நேரலை பாதியிலேயே நிறுத்தப் பட்டதாகவும் சில இந்துத்வா பத்திரிகைகள் பொய் தகவல் பரப்பின. இதனை ஏற்கனவே ஆதாரத்துடன் நிரூபித்தோம்.

இந்நிலையில் தினகரன் பத்திரிகையும் அதே செய்தியை ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளதுடன், இந்துத்வாவுக்கு தினகரனும் விலை போய்விட்டதா? என்று அஞ்சத் தோன்றுகிறது.

மேலும் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டவர்களும் இந்த செய்தியை மறுத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று பொய் செய்தி பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக கொந்தளிக்கின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...