ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்!

ஜனவரி 16, 2019 432

சென்னை (16 ஜன 2019): ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஏப்ரல் 28ல் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடற்கூராய்வில் கனகராஜ் மது அருந்திதியதாகவும், டிஐஜி செந்தில் குமார் தெரிவித்தார்

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கனகராஜன் பற்றி இவ்வாறு தகவல் வெளியாவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தை நாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...