செல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்!

ஜனவரி 16, 2019 407

சென்னை (16 ஜன 2019): சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து பெண்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சூளைமேட்டில் மகேஷ் என்பவருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட பணிக்கு செல்லும் பெண்கள் தங்கியுள்ளனர். இதில் பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விடுதி புகை மண்டலமாக மாறியது. உடனே அருகில் இருந்தவர்கள் விடுதியின் உரிமையாளர் மகேஷ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு தீ காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதில் 4 பெண்களுக்கு மூச்சு திணறல், தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதன்பிறகு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். செல்போன் சார்ஜர் வெடித்ததால், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...