காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக? -அதிர்ச்சியில் காங்கிரஸ்!

ஜனவரி 16, 2019 457

சென்னை (16 ஜன 2019): மம்தா பானர்ஜி ஒருங்கிணைத்துள்ள கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதால் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் தாவுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி கலந்து கொண்டதை வைத்து திமுக-காங்கிரஸ் உறுதியானது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த விழாவில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி கொல்கத்தாவில் பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணியை மம்தா பானர்ஜி உருவாக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் உறுதி செய்யப்பட்ட ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...