இளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் பயங்கரம்

ஜனவரி 16, 2019 781

திருச்சி (16 ஜன 2019): திருச்சி அருகே இளைஞரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை கடத்தி நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்துள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் தமிழ்வாணன். அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியை தமிழ்வாணன் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் நாளில் இருவரும் சென்னை -திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள குமளூர் பகுதியில் இருவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவர்களில் ஒரு நபர் தான் வைத்திருந்த கத்தியால் தமிழ்வாணனை கத்தியால் குத்தியுள்ளார். அவர் மயங்கி அதே இடத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அந்த பெண்ணை 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் கடத்திச் சென்றனர். மேலும் அந்த பெண்ணை பாலியல் பவன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடினர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...