மூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா?

ஜனவரி 18, 2019 433

சென்னை (18 ஜன 2019): மூன்றே நாளில் ரூ 500 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது டாஸ்மாக்.

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை கொடிகட்டி பறக்கும், அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் 500 கோடியை தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...