அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி!

ஜனவரி 18, 2019 355

மதுரை (18 ஜன 2019): மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண உலகம் முழுக்கவிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இருக்கிறார்கள்.

இந்த ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்கிறது.இதில் 848 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அதேபோல இன்னொருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...