திமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்!

ஜனவரி 23, 2019 461

சென்னை (23 ஜன 2019): எடப்பாடி பதவி விலக கோரி நடத்தும் திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொடநாடு விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அதே நாளில் அவர் இது தொடர்பாக ஆவணப்படமும் வெளியிட்டார்.

இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பதவி விலக கோரி போராட்டம் நடத்த போவதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி திமுக சார்பாக நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வீடு முன் போராட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக சார்பாக நாளை ஆளுநர் வீடு முன் நடத்தப்படும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...