பெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்!

ஜனவரி 23, 2019 402

சென்னை (23 ஜன 2019): பெண்களுக்கென தொடங்கப் பட்டுள்ள கட்சியின் தமிழக தலைவராக பிக்பாஸ் நித்யா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த வாரம் தொடங்கிய புதிய கட்சியான தேசிய பெண்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்று சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவராக நித்யா தேஜூ பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

பெண்களுக்கு நடக்கும் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த கட்சியில் சேர்ந்த இவர், கட்சியின் சார்பாக பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...