அதிராம்பட்டினத்தில் ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை!

ஜனவரி 26, 2019 432

அதிராம்பட்டினம் (25 ஜன 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகைக் கடையை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் திலகர் தெருவில் சிபகத்துல்லா என்பவருக்கு மாஜிதா ஜுவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் சிசி டிவி மற்றும் ஹார்ட் டிஸ்க் இன்வெட்ட உள்ளிட்டவைகளும் திருடப் பட்டுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராஜராஜன் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...